தலைக்கனத்தால் வாய்ப்புகளை இழந்த 5 நடிகைகள்.


Cinemugam

சினிமாவில் ஓவர் தலைக்கனத்துடன் வாய்ப்பை இழந்தவர்கள் பலர் உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இந்த 5 நட்சத்திரங்கள் தங்களுடைய ஓவர் வாயாலயே நல்ல பெயரை கெடுத்துக் கொண்டனர். அதிலும் இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு இருக்கும் அளவுக்கு வேறு யாருக்கும் ஆர்மி உருவாகவில்லை. ஆனால் அதை வைத்து அவர் சினிமாவில் எங்கேயோ சென்று இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கண்டபடி பேசி தனது பெயரையே கெடுத்துக் கொண்டார்.

ஓவியா: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் சீசனில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஓவியா, அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனக்குரிய பெயரை கெடுத்துக் கொள்ளும் வகையில் கண்டபடி பேசி வம்பு இழுத்தார். அதன் பின் இவருடைய சினிமா கேரியரே டோட்டலாக கவிழ்ந்தது.

மீரா மிதுன்: மாடல் அழகியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், பிரபலங்களை தரக்குறைவாக பேசியும் சோசியல் மீடியாவில் பலருடைய பகையை சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் பட்டியலின மக்களை இழிவு படுத்தும் வகையில் அவர் வெளியிட்டு இருந்த வீடியோவால் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளிவந்தார்.

அமலா பால்: சர்ச்சைக்குரிய திரைப்படம் ஆன சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அமலாபால், அதன் பிறகு மைனா திரைப்படத்தில் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின் தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார்.

பின்பு இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்டு வெகு சீக்கிரமே விவாகரத்தும் பெற்றார். அதன்பின் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதும், ஆண் நண்பர்களுடன் குடியும் கூத்தடிக்கும் வீடியோவை பதிவிட்டு தனக்குரிய நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.




ஆண்ட்ரியா: இவர் முதலில் பின்னணி பாடகியும் பின்னணி குரல் கொடுப்பவருமாக சினிமாவில் முதலில் தோன்றி அதன் பிறகு நடிகையாகவும் வளம் வந்தார். வெகு சீக்கிரமே முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற ஆண்ட்ரியா, அதன்பின் பல விஷயங்களில் கிசுகிசுக்கப்பட்டு பட வாய்ப்புகளை தவறவிட்டார்.


ரேகா நாயர்: சீரியல்களில் தோன்றிய இவர், அதன் பிறகு இரவின் நிழல் திரைப்படத்தில் மேலாடி இன்றி நடித்த தன்னை தரைகுறைவாக விமர்சனம் செய்ததாக கூறி பொது இடத்தில் நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அதன் பிறகும் இவர் பல பேட்டிகளில் வாயை விட்டு வம்பில் மாட்டிக் கொண்டார்.


இவ்வாறு இந்த ஐந்து பிரபலங்களும் தங்களுக்கு இருக்கும் நல்ல இமேஜை கெடுத்துக்கொண்டு சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் இவர்களது தலைக்கனம் தான் காரணம்.