நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி மிக பிரம்மாண்ட ஹிட் ஆனது. தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை குவித்தது புஷ்பா. அதனால் அடுத்த பாகத்தை இன்னும் மிக பிரம்மாண்டமாக எடுக்க படக்குழுவினர் முடிவெடுத்து இருக்கின்றனர்.
அது மட்டுமின்றி கடந்த மாதம் ரிலீஸ் ஆன கேஜிஎப் 2 படத்தின் வெற்றியை பார்த்து அனைவரும் வியந்து இருக்கும் நிலையில் அதற்க்கு இணையாக புஷ்பா அடுத்த பாகத்தையும் மேலும் பட்ஜெட் ஒதுக்கி பிரம்மாண்டமாக எடுக்க கதையில் சில மாற்றங்களை இயக்குனர் சுகுமார் செய்து வருகிறார்.
400 கோடி பட்ஜெட்
இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் அல்லு அர்ஜுன் வாங்கும் சம்பளம் பற்றி ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளிவந்து இருக்கிறது.
மொத்த பட்ஜெட் 400 கோடி ருபாய் என்றும், அதில் அல்லு அர்ஜுன் மட்டுமே 100 கோடி ரூபாயை சம்பளமாக பெற இருக்கிறார்.
#AlluArjun #PushpaTheRise #Pushpa2Update