சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் இணையும் கார்த்தி – இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் டைட்டில் லுக் போஸ்டர்.!!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் இணையும் கார்த்தி – இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் டைட்டில் லுக் போஸ்டர்.!!

September 6, 2021


சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகி உள்ள திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.


Surya Jyothika

Viruman Movie Title Look Poster : சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’, ‘கடைக்குட்டிசிங்கம்’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் ப்ளாக் பஸ்டர் வெற்றி படங்களாக தந்து வருகிறது.


இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உலகளவில் மிகப்பெரும் அங்கீகாரத்தையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இதையடுத்து 2D Entertainment நிறுவனம் பெருமைமிகு படைப்பாக “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட பிரமாண்ட புதிய படத்தை தயாரிக்கிறது. இதில் அதிக வசூல் சாதனை படைத்த கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி மீண்டும் இணைகிறார்.


நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’. இயக்குநர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.


Karthi



‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.


இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார். 


ஏற்கனவே நடிகர் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டிசிங்கம்’ பிரமாண்ட வெற்றி பெற்றது. இப்போது அவரது தயாரிப்பில் ‘கொம்பன்’ கூட்டணி இணைவதை தொடர்ந்து, இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Viruman Movie Title Look Poster



இப்படத்தின் பூஜை இன்று ( திங்கள்கிழமை ) நடைபெறுகிறது.

செப்டம்பர் இம்மாதம் 18 ஆம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறும்.