அட்லீ இயக்குனர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து விட்டு "ராஜா ராணி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் இயக்கிய தெறி திரைப்படத்திற்காக விஜய் விருது (Vijay Award) வென்றுள்ளார். இவர் இயக்கி, விஜய் நடித்த மெர்சல் படமானது தீபாவளி பண்டிகை அன்று வெளியானது மற்றும் பிகில் திரைப்படம் மீண்டும் நடிகர் விஜய்யுடன் தீபாவளி 2019 வெளிவந்தது .
விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிய இந்த நிலையில் தற்போது ஷாருக் கானை வைத்து தன்னுடைய நான்காவது படத்தை இயக்கி வருகிறார். அட்லீ இயக்கும் முதல் பாலிவுட் படம் கூட இதுதான்.
இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் யோகி வந்து மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு புனே நகரில் தொடங்கி இருந்த நிலையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோரின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக புனே சென்றிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஆகியோர் ரயில்வே நிலையத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.