தர்ஷன் உடன் படுக்கை அறை காட்சியில் நடிப்பதற்கு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் லாஸ்லியா பதிலடி கொடுத்துள்ளார்.
Losliya Reply About Bedroom Scene With Tharshan : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.
இவர்கள் இருவரும் தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இந்த டீசரில் தர்ஷன் லாஸ்லியாவின் நெருக்கமாக படுக்கையறை காட்சியில் நடித்திருந்தனர். இதனால் இந்த காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் தற்போது இதுகுறித்து லாஸ்லியா அளித்த பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது தர்ஷன் எனக்கு அண்ணன் மாதிரி. அது ஒரு படத்தில் நடித்தது அவ்வளவு தான். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறிவிட்டார்.