பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்? வெளிப்படையாக அறிவித்த பிரபல நடிகை
September 7, 2021
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதற்காக தகவல் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை.
Lakshmy Ramakrishnan About Bigg Boss 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த வருடம் நிறைவடைந்த நிலையில் இந்த வருடம் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் போட்டியாளர்களாக பங்கேற்கப் போவதாக பலருடைய பெயர்கள் அடிபட்டு வருகின்றன. லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரும் உண்டு. இந்நிலையில் விஜய் டிவி ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் 5 போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என ஒரு ட்விட் பதிவு செய்தது.
இதனையடுத்து ரசிகர்கள் பலரின் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படி லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரையும் ரசிகர்கள் பதிவிட அவர் இதில் கலந்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.