பிக் பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரெண்ட்ஷிப் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Release Date of Friendship Movie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் லாஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழை தொடர்ந்து பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.