கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்.!!
September 6, 2021
நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் திரையுலகில் அறிமுகமாகிறார்.
Director Shankar Daughter Pair With Karthi : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக விருமன் திரைப்படம் உருவாக உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகிறது.
பிஜி முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிக்கும் முதல் படம் இதுதான்.
இதன்காரணமாக இந்த படத்தின் பூஜையில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இயக்குனர் ஷங்கருக்கு இவ்வளவு பெரிய மகளா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இவருடைய மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்தி திரைவாழ்வில் ‘பருத்திவீரன்’ திரைப்படத்திற்கு பிறகு கிராமத்து இளைஞனாக, அவரை தமிழகம் முழுக்க கொண்டாட வைத்த படம் ‘கொம்பன்’. இயக்குனர் முத்தையா இயக்கத்தில், குடும்ப உறவுகளின் பெருமை சொல்லும் படமாக, சிறப்பான கிராமத்து பின்னணியில் உருவான அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது.
‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதி(அறிமுகம்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.
இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.
ஏற்கனவே நடிகர் சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டிசிங்கம்’ பிரமாண்ட வெற்றி பெற்றது. இப்போது அவரது தயாரிப்பில் ‘கொம்பன்’ கூட்டணி இணைவதை தொடர்ந்து, இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் பூஜை இன்று ( திங்கள்கிழமை ) நடைபெறுகிறது.
செப்டம்பர் இம்மாதம் 18 ஆம் தேதி தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறும்.