ஜி பி முத்துவை கலாய்த்த சதீசை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Fans Trolls Actor Sathish : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சியில் நான்காவது சீசன் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த ஐந்தாவது சீசனில் யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
அந்த வகையில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் அவர் பிக் பாஸ் வீட்டில் வெளியே இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியானது.
இந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சதீஷ் உள்ள என்ன டாஸ்க் வேணாலும் குடுங்க ஆனா டாஸ்க் பேப்பரை மட்டும் படிக்க வைத்து விடாதீர்கள். செத்த பயலே நார பயலே என பதிவு செய்திருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த காமெடியை கொஞ்சமாச்சும் படத்தில் நடிக்கும்போது பண்ணலாம்ல என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.