பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் ஆளாக ஜித்தன் ரமேஷ் வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இரண்டு பேர் எவிக்ஷன்

ஆனால் இன்று வெளியான முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜோடி ஜோடியாய் விளையாடியதால் இந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவதாக கூறினார். இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்படவுள்ளார்கள் என்றும் கூறினார்.

யாராக இருக்கும்?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

மேலும் அவர்களில் ஒருவர் இன்றே வெளியேற்றப்படுவார் என்றும் கூறினார் கமல். இதனால் எவிக்ட்டாக உள்ள அந்த இரண்டு பேர் யாராக இருக்கும் என யோசிக்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.

யார் வெளியேறியது?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடுக்கான படப்பிடிப்பு இன்று மதியமே நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும நபர் யார் என்பது குறித்த தகவல் தீயாய் பரவியது.

ராஜா வீட்டு கண்ணுக்குட்டி

அதன்படி பிக்பாஸ் வீட்டில் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாய் இருந்த ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஆரியால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார் ரமேஷ்.

தப்பித்த ரமேஷ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

ஜித்தன் ரமேஷ் இரண்டு வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தப்பித்ததாக கூறிய கமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவரை விட சில ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்ற சம்யுக்தாவை வெளியேற்றினார்.

முதல் நபராய்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

கால் டாஸ்க்கின் போது நிஷாவால் சேவ் செய்யப்பட்ட ஜித்தன் ரமேஷை ஆரி நாமினேட் செய்தார். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் முதல் நபராய் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜித்தன் கன்ஃபெஷன் ரூம்

இதுதொடர்பாக அறிவிக்க சோமை ஸ்டோர் ரூமுக்கும், ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமுக்கும் அனுப்பி வைத்தார் கமல். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருந்த ஜித்தன் ரமேஷை அங்கிருந்த கதவை திறந்து வெளியே செல்லும்படி கூறினார் பிக்பாஸ்.

கண்ணைக் கட்டி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இதனை தொடர்ந்து ஸ்டோர் ரூமில் இருந்த சோமை கண்ணை கட்டி கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து சென்றனர். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருநுது வீட்டுக்குள் வந்தார் சோம். இதன் மூலம் இந்த வார எவிக்ஷனில் இருந்து சோம் தப்பித்து விட்டார்.

இரண்டாவது நபர்?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இரண்டாவது நபராக நாளைக்கான எபிசோடில் சோம சேகர் வெளியேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நாளைக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிஷாதான் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

அர்ச்சனாவின் அன்புக்குரிய செல்லப்பிள்ளையான சோம் நாமினேஷனில் இருந்து தப்பித்தாலும், ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருப்பது அர்ச்சனா அணிக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!