Tamilcinema.news அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் என்பதால், இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சோஷியல் மீடியா வாழ்த்துக்களால் நிரம்பி வழிகிறது
நயன்தாரா தற்போது பணியாற்றி வரும் படக்குழுவினரும் தங்கள் வகை பரிசாக டீசர், போஸ்டர் என வெளியிட்டு அசத்தி வருகின்றனர். அந்தவகையில் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நடித்துவரும் 'நிழல்' என்கிற படத்தின் குழுவினர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.