Tamilcinema.news சென்னையை சேர்ந்த பிரபல மாடல் அழகி லுத் புனிசா. சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். அடிக்கடி தனது படங்களை வெளியிடுவார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்று நோயாளிகளுக்காக தலையை மொட்டை அடித்துக் கொண்டு முடிதானம் செய்யது பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் லுத்புனிசா வெளியிட்டு படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. நயன்தாரா தோற்றத்தில் இருக்கும் அவரது படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கேரளாவை சேர்ந்த அமிர்தா என்பவர் அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போன்று தோன்றி டிக்டாக் வெளியிட்டார். இப்போது அவர் நடிகை ஆகிவிட்டார். அதேபோல தற்போது நயன்தாரா போன்று இருக்கும் லுத் புனிசாவையும் படத்தில் நடிக்க கேட்டு சிலர் அணுகி இருக்கிறார்கள். விரையில் இதற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.