Tamilcinema.news தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் த்ரிஷா, தனது திருமணம் திட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "என்னை முழுமையாக புரிந்து கொள்பவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும்.
ஆனால் அப்படி ஒருவரை நான் இதுநாள் வரை பார்க்கவில்லை. அப்படி ஒருவரை சந்திக்கும் வரை நான் சிங்கிளாகவே இருப்பேன். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை என் மனதுக்கு பிடித்தவரை நான் பார்க்காமலே போனாலும் எனக்கு கவலை இல்லை. வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் சிங்கிளாகவே இருந்துவிடுவேன்", என த்ரிஷா கூறியுள்ளார்.