பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த சுசித்ரா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாகி விட்டார். அவரது பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விநாயகர் சிலை போட்டோவை முதல் போஸ்டாக பதிவிட்டு எனது பாதுகாவலர் என்று குறிப்பிட்ட சுச்சி, அடுத்ததாக தனது பழைய டிக் டாக் வீடியோவை பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து தனது புதிய புகைப்படத்தை பதிவிட்ட அவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாலாஜி - ஷிவானி காதல் குறித்த மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.