மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப் பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்த அனிகா விற்கு மார்க்கெட் கூடியது.
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.
குழந்தை சிரிப்பில் மனம் கவர்ந்த அனிகா தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தாறுமாறு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.