பல கட்ட சட்ட போராட்டங்களையும் கடந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல். தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.
வழக்கமாக தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து சில மணி நேரங்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை மட்டும் மறுநாள் முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின் படி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.