எஸ்.பி. ஜெகநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் படம் லாபம்.
சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக நின்று போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
விஜய் சேதுபதி படப்பிடிப்பு என்றாலே அவரது ரசிகர்கள் எப்படியாது அவரை பார்க்க வந்துவிடுவார்கள்.
அப்படி லாபம் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியை பார்க்க அவரது ரசிகர்கள் வந்துள்ளது. அப்போது தனது பாணியில் ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் சேதுபதி.
கொரோனா காலத்தில் விஜய் சேதுபதி இப்படி செய்ததை தெரிந்துகொண்டார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இதனால் விஜய் சேதுபதியுடன் நடித்தால் நமக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கடுப்பாகி படப்பிடிப்பை விட்டு வெளியிறிவிட்டாராம் நடிகை ஸ்ருதி ஹாசன்.