பிக் பாஸ் வீட்டில் அம்மா-மகன் மோதல்: ஹவுஸ்மேட்ஸ் ஷாக்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா - பாலாஜி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் அம்மா-மகன் மோதல்: ஹவுஸ்மேட்ஸ் ஷாக்


51 நாட்களை கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 பேர் வெளியேற்றப்பட்டு 14 பேர் போட்டியாளர்களாக இருக்கின்றனர். விரைவில் சின்னத்திரை நடிகர் முகமது அசீம் 3-வது வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இரண்டாவதாக வெளியிடப்பட்டிருக்கும் புரமோவில் பாலாஜியும் அர்ச்சனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்ரியல்லா பாலாஜியிடம் உங்களைப்பற்றி எதுவும் கூறவில்லை என்று சொல்கிறார். தொடர்ந்து பேசும் பாலாஜி என்மேல் பழிபோட்டுக் கொண்டே இருக்க வேண்டும். என் பெயரைக் காலி செய்ய என்னவெல்லாம் குற்றச்சாட்டு என் மீது வைத்தீர்கள். உங்களுடைய கேம் எனக்குத் தெரியும் அர்ச்சனா என்கிறார்.


உடனே என்னை அக்கா எனக் கூப்பிட வேண்டாம் அர்ச்சனா எனக் கூப்பிடுமாறு பாலாஜியிடம் கோபமாக பேசுகிறார் அர்ச்சனா. மற்ற போட்டியாளர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.